முடிவிலி
உன் எழில் குழையும் நடையில் , தமிழ் பொழியும் அழகில் மயங்கி , என் கற்பனை புரவியில் உதித்த கவிதைகள் இவை ..... கண் கோடி வேண்டுமடி அன்பே உன் கவின் காண , கார் யாமத்தில் நான் கண்ட அற்றை திங்களே ! வசைக்கும் போது வல்லினமாய் , இயல்பில் நீ இடையினமாய் , மொத்தத்தில் மெல்லினமடி நீ ... குவியமில்லாத கட்சி பேழையாய் , உன் குழகின் முடிவிலியில் மாட்டினேன்... - நா.வா