Posts

Showing posts with the label Poetry

கைக்கோர்த்தல்

அவள் என் கைப்பிடித்து நடக்க எதிர்பார்த்ததில்லை, அவளோடு கைக்கோர்த்து நடக்க என்னினேன்... -- நா வா

ஜலதோசம்

ஜலதோசத்துடன் சண்டையிட்டேன், உன்னை பிடித்திருக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என ... --நா வா

இரவின் ஏக்கம்

இரவின் ஏக்கம் நிலவின்பாள், ஈசலின் ஏக்கம் ஒளியின்பாள், பந்தியின் ஏக்கம் இலையின்பாள், பாலையின் ஏக்கம் நீரின்பாள், மழழையின் ஏக்கம் அன்னையின்பாள், மாலுமியின் ஏக்கம் கடற்கரையின்பாள், எந்தன் ஏக்கம் உந்தன் செல்பேசி அழைப்பின் பாள்... --நா வா

பரணி

பாவலரரை வரசெய்து  எந்தன் பரணியொன்றை படைக்கச் செய்வேன், பாவையை வென்றது, பார் வென்றதற்க்கு ஈடன்றோ!!!! --நா வா

பதுமை

பதுமை ஒன்று பாவையாக கான கண்டேனே, பேரழகியளின் வெண்பாக்கள் யாவும் நான கண்டேனே !!!! --நா வா

உரையாடல்

அண்டம் சுழன்று போனது அவள் விழியின் வழியே எந்தன் உரையாடல் நிகழ்ந்த போது... --நா வா

அச்சமுண்டு

அச்சமுண்டு!!! அச்சமுண்டு!!! அவளின் கண் பேசும் மொழியின் அழகு கன்னித் தமிழை மட்டுபடுத்திவிடுமோ என... --நா வா

புருவம்

ஆதவன் அந்தம் அடையும் அழகை வென்றது, உந்தன் புருவத்தின் இடையே இட்ட பொட்டின் அழகு... --நா வா

சந்திராயன் 2

வென்மதியை  நோ க்கி விரைந்து தன்மதியை இழந்தானே விக்ரமன்... கடமைகள் பல காத்திருக்கு, கனவுகள் பல எதிர்பாத்திருக்கு, கண்களை திற எந்திரனே !!!        -நா வா

கடவுள் காப்புரிமை படைப்பு

கருங்குழியால் கண்கள் செய்து, காண்டீபம் கொண்டு அதன் புருவம் செய்து, நவிரம் வெட்டி நாசி செய்து, செம்புற்று கொண்டு செவ்விதழ் செய்து, ஒரு நிகர்ப விண்மீன் கொண்டு மேனி ச...

பகிரி

பகிரியின் பதிவை பலநூறு கண்கள் கண்டாலும், பாவையின் பார்வைப்பட்டதா என காண துடிக்குது கண்கள்...                              - நா வா

மணிமான்

மேகங்களுக்கு ஆணையிடுகிறேன் !!! மணிமானை மறைத்து, உன் மேனி காக்க...                       - நா வா

காதல் சொன்ன தருனம்

தமிழ் கூறிய ஆண்மை இலக்கணம் யாவும் தவடுபொடியானது , தலைவியிடம் காதலை சொல்ல தத்தளித்த அந்நொடியில் ...        --நா வா

தனிமை

தனியே விடு என தள்ளிச் சென்றாய், தாமரை உந்தன் சொல் தட்டாமல் நின்றேன், வாரம் ஒன்று ஓடிப்போக காத்திருந்தேன், வருமோ உந்தன் பகிரியின் செய்தி???                    - - நா. வா

பகிரி

பாலை நிலத்து பாலகன் எதிர்பார்த்திருந்த பனித்தல் போல், பாவையின் பகிரியின் செய்தி  எதிர்ப் பார்த்திருந்தேன்...                       --நா வா

மாரி

மறைநீரை பற்றி அறிந்திலர் மக்கள் மாரி பொய்த்த பின் மகத்துவம் அரிவர் அதுபோல் யானும் இங்கே... கண்ணருகே இருந்த கண்மணியின் அருமை அவள் கடந்து சென்ற பின் கண்டறிந்தேன்...

நட்பு

எங்களுக்குள் ஏகாந்தம் ஏதுமில்லை, எம்மை ஏகாந்த நிலைக்குள் செல்ல விட்டதில்லை, எங்களுக்குள் ஏளனம் செய்திடாத நாட்களில்லை, என் நன்பர்களை விட்டு என்னை  கூட்டி செல், எமனிடம் யான் வைத்த ஏகாந்தம் அதுவே...

போக்குவரத்து சமிக்கை

போக்குவரத்து சமிக்கையை தெருமுனை தெய்வாமாக வழிபட்டேன் ,  உன்னோடு பயணிக்கும் சாலை யாவும் சிகப்பு சமிக்கை காண்பிக்க.... - நா வா

எரிமலை

எரிகுழம்பு கக்கும் எரிமலைக்கண்டு எள்ளி நகையாடினேன், என்னாளின் எரிதழல் சொற்றொடர்க்கு ஒப்பாக எள்ளவும்  அனல் இல்லையென...                                                                 - நா.வா

வினா

விடையறிந்த  வினாவிற்கு  விடையறிய  விரைவது  விந்தையே...                           - நா.வா