Posts

Showing posts from April, 2010

அன்னை

அணு ஆயுதமும் தோற்றுப்போகும், அவளின் அன்பிற்கு முன்னாள், நிலவும் அழகு குறைவுதான் அவளின் முகத்திற்கு முன், கடவுள் கூட அவளின் கருணைக்கு ஏங்குவான், அகிலத்தில் நம்மை முதன் முதலாய் அரண் அமைத்து காத்தவள், அவளே நம் அன்னை .....                                                          - நா.வா

கடவுச்சொல்

எந்நிலையிலும்  எண்ணியதில்லை இந்நிலை வருமென ... உன்னிலை என்னி என்னிலை மறந்தேன் ... காலத்தே நிலைத்திருக்கும் கடவுச்சொல்லாக உன்பெயர் ...                                              - நா.வா 

நினைவில் பிறந்த வரிகள்

காலங்கள் கடக்கும் போது, கரைந்து போகும் அவளின் நினைவுகள்... காலத்தே கடந்து நிற்கும், நினைவில் பிறந்த வரிகள்...                                          - நா.வா

அற்றை திங்கள்

அற்றை திங்களில் , ஆழி அமைதி கொள்ள ஆதவன் அந்தம் அடைய , அன்னையின் பனிக்கூடம் உடைத்து , அண்டத்தில் அடிவைத்தால் ஓர் அரிவை, அலரிகள் பூத்துக்குலுங்கும்  அடவிபோல், அவளின் அதரத்தின் சிரிப்பு ... அவளே என் ஆண்மையை ஆழ வந்த அரசி, அடரியம் இல்லா அணுவுலை போல், அவளில்லாமல் நானில்லை... அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்பர், என் அனுவின்றி நானும் அசையேன் ...                                                 - நா.வா

காட்சிப்படம்

உன் காட்சிப்படம் கான ஒரு போதும் தவறியதில்லை, என் புலனத்தின்  நிலை கான ஒரு போதும் நீ தவறியதில்லை, நீ காண்கிறாயாய என கான நானும் தவறியதில்லை, உன் மெளவுனம் கொண்டு என் மனம் உடைப்பாயா ? அல்ல உன் சொற்கள் கொண்டு என் செவி நிறைப்பாயா ?                                                                                                                  - நா.வா