Posts

Showing posts from June, 2010

எரிமலை

எரிகுழம்பு கக்கும் எரிமலைக்கண்டு எள்ளி நகையாடினேன், என்னாளின் எரிதழல் சொற்றொடர்க்கு ஒப்பாக எள்ளவும்  அனல் இல்லையென...                                                                 - நா.வா

வினா

விடையறிந்த  வினாவிற்கு  விடையறிய  விரைவது  விந்தையே...                           - நா.வா              

தேநீர்

மழைச்சாரலின் மடியில்.. என்னவளின் ஏதிரில்... ஒரு தேநீர் ...                              - நா.வா

துயில்

செம்பரிதி துயில கண்ட கண்கள், வென்மதியின் துயில் காண்கிறது...                                  - நா.வா

பெண்மயிலின் சிகண்டம்

பேருந்தின் சன்னல் ஒரத்தே  ஓர் பேரழகு பேழை, காற்றை கிளித்துக் செல்லும் பயனத்தில், அவளின் சிகையும் விரிந்து பறந்தது, அக்காட்சி கண்டு வாதிட புறப்பட்டேன் பெண்மயிலுக்கு ம் சிகண்டம் உண்டு என !!!                                                                                       - நா.வா

கடவுள் கல்லல்ல கவிஞன்

கருமேகங்கள் சூழ்ந்த இளவேனில் காலத்தே கார்குழல் தரித்த செங்காந்தல் கண்ணியாக என் முன்னே தோன்ற, கடவுள் கல்லல்ல கவிஞன் என்றுனர்ந்தேன்...                                                                                        - நா.வா

காதலித்தேன்

காதலித்தேன்... பாடலின் இசையை அன்றி அவற்றின் வரிகளை, என்னவளை  உருவகபடுத்துவதாள்... செடியின் பூவை அன்றி அவற்றின் கொடியை, என்னவளின் இடையை ஒத்தே இருப்பதால்... நிலவை பெளர்ணமியில் அன்றி தேய்பிறையில், என்னவளின் தேகத்தை பிரதிபளிப்பதால்... சுட்டெறிக்கும் சூரியனை, சினம் கொண்ட என் கண்மனியின் முகம் அதில் தெரிவதால்...                                                                                                                      - நா.வா

மானுடம்

கடவுள் துகளை கண்டறிந்த மானுடத்துல், கருங்குழியை கண்டறிந்த மானுடத்துல், கண்ணியின் மனதை கண்டறிய துடிக்கும் நானும் ஒருவனே !!!                                                                                                              - நா.வா