Posts

Showing posts from May, 2010

வெண்மதி

வெண்மதியின் பாதி உன் நெற்றி , அதன் சரிபாதி உன் நாசி .... சேரனின் வில்லோ உன் செவிகள் ? காரிருள் மேகமாடி உன் கருங்கூந்தல் , மழைத்துளியின் ஓசையும் உன் குரலும் ஒன்றே ....                                             - நா.வா

செவ்விதல்

என் ஆண்மையை ஆள வந்த அரிவையே ... ஞாயிறுக்கும் கண் கூசும், நீ புண்கையித்தால்... களிறுகள் பிளிறும், உன் கடும் சினம் கண்டு ... செங்கதிரோன் வெட்கப்படுவான், உன் செவ்விதல்களை கண்டு ...                 - நா.வா

அரிவை

அரிவையே ... என் அகம் அறிந்தவளே... உன் தேகம் தீண்ட தென்றலும் ஏங்கும்... உன் கூர் விழி கண்டு வாள்களும் வெட்கப்படும்... என் மனமெனும் மாளிகையை அழங்கரிக்க வந்த பாலிகையே ... உன் அதரத்தின் அழகை கண்டு ஆழியும் அமைதி கொள்ளும் பூக்களுக்குள் கலவரமாம் உண் கார் கூந்தளை அடைய ... பூவுலகின் புதல்வியே புன்னகைத்து கொண்டே இரு...                                                     - நா.வா

காற்றில் பறந்தேன்

காற்றில் பறந்தேன் , உன் மூச்சுக்காற்று என்னை வருடியபோது ... மின்னல் என்னை தாக்கியது , நம் முதல் சந்திப்பில் ... என் செங்குருதி  உறைந்தது அன்பே , உன் செவ்விதழ்களை கண்டு  ... இரு கதிரவனை ஒரு சேர கண்டேன் , உன் இரு விழிகளில் ... என்னுள் பூகம்பத்தை உண்டாக்கினாய் , உன் புன்னகை கொண்டு ...                               - நா.வா

அந்தமும் ஆதியும்

உன் மூச்சுகாற்றில் மூழ்க ஆசை இல்லை , உன்னை வருடும் தென்றல் என்னை தீண்டினால் போதும் ... என் அந்தமும் ஆதியும் நீயாக இல்லாவிடினும் , உன் கை கோர்த்து நடக்கும் மணித்துளிகள் போதும் ... காமம்  தேவையில்லை அன்பே , உன் கடைக்கண் பார்வை போதும் ...                                          - நா.வா

கழுவாய்

மடுவாய் மறையுமென எண்ணிய உன் நினைவுகள்... வடுவாய் மாறி வதைப்பதேனோ ? காலத்தே யான் செய்த பிழைக்கு... கழுவாய் உண்டோ கண்மனியே ?                                - நா.வா