அந்தமும் ஆதியும்

உன் மூச்சுகாற்றில் மூழ்க ஆசை இல்லை ,
உன்னை வருடும் தென்றல் என்னை தீண்டினால் போதும் ...
என் அந்தமும் ஆதியும் நீயாக இல்லாவிடினும் ,
உன் கை கோர்த்து நடக்கும் மணித்துளிகள் போதும் ...
காமம்  தேவையில்லை அன்பே ,
உன் கடைக்கண் பார்வை போதும் ...

                                         - நா.வா